
புதுடெல்லி: ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உதவிகளை அளிக்க தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நல்சா) முன்வந்துள்ளது.
‘நல்சா வீர்பரிவார் சகாயதா யோஜனா 2025’ என பெயரிடப்பட்ட இத்திட்டத்தை நல்சா செயல் தலைவர் நீதிபதி சூர்ய காந்த் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.