
சென்னை: தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்படும் மின் கட்டணத்தில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு சாதாரண குடிமகனுக்கு ரூ.7.85, கோயிலுக்கு ரூ.7.85, கோசாலை பசு மடத்துக்கு ரூ.7.85, மசூதிக்கு ரூ.1.85, சர்ச்சுக்கு ரூ.1.85 என்று அதில் தெரிவித்திருந்தார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.