• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வலிமை​யான ராணுவமே நாட்​டின் பாது​காப்​பு, பெரு​மைக்கு அடிப்​படை என்று ராணுவ அதி​காரி​களுக்​கான பாராட்டு விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார். புயல், மழை, வெள்​ளம், நிலச்​சரிவு போன்ற இயற்கை பேரழி​வு​களின்​போது மேற்கொள்ளும் மீட்​பு, நிவாரண பணி​கள் மற்​றும் ‘ஆபரேஷன் சிந்​தூர்’ நடவடிக்​கை​யில் இந்​திய ராணுவ தென் பிராந்​திய பகுதியின் அசா​தாரண பங்​களிப்பை பாராட்​டி, நன்றி தெரிவிக்​கும் விழா ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், ராணுவத்​தின் 16 மெட்​ராஸ் (திரு​வாங்​கூர்), 35 ஃபீல்ட் படைப்​பிரிவு, ஆவடி ஆயுத தொழிற்​சாலை, 65 கம்​பெனி ராணுவ சேவை படை (விநி​யோகம்) ஆகிய 4 பிரிவு​களை சேர்ந்த ராணுவ அதி​காரி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ரவி பாராட்டு சான்​றிதழ் வழங்கி கவுர​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *