
மதுரை: “தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் தலைமை” என பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுதாகர் ரெட்டி இன்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து அதிகளவில் உள்ளது. 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று சட்டம் – ஒழுங்கை சரி செய்யும்.