• July 25, 2025
  • NewsEditor
  • 0

சவுதி அரேபியா அதன் பரந்த பாலைவனங்களுக்கு பெயர் பெற்ற நாடாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்கிறது.

இது ஆச்சரியமாகத் தோன்றினாலும், உயர்தர மணலுக்கு நாடு இறக்குமதியை நம்பியுள்ளது. இது உலகளாவிய மணல் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது.

சவுதி அரேபியா

பாலைவன மணல் ஏன் பொருந்தாது?

சவுதி அரேபியாவின் பாலைவனங்களில் மணல் ஏராளமாக இருந்தாலும், அது கட்டுமானத்திற்கு ஏற்றதல்ல. பாலைவன மணல், காற்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரிக்கப்பட்டு, மென்மையாக இருப்பதால், கான்கிரீட் தயாரிப்புக்கு இது பொருத்தமானதாக இல்லை.

கட்டுமானத்திற்கு ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்பரப்பில் இருந்து கிடைக்கும் கரடுமுரடான மணல் தேவைப்படுகிறது. ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) படி, உலகம் ஆண்டுதோறும் 50 பில்லியன் டன் மணலை பயன்படுத்துகிறது. ஆனால் அதில் ஒரு பகுதி மட்டுமே கட்டுமானத்திற்கு ஏற்றது.

ஆஸ்திரேலியாவின் பங்கு

2023-ல், ஆஸ்திரேலியா 273 மில்லியன் டாலர் மதிப்புள்ள மணலை ஏற்றுமதி செய்து, உலகின் இரண்டாவது பெரிய மணல் ஏற்றுமதியாளராக இருந்தது.

சவுதி அரேபியா 140,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான மணலை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்தது. மெகா திட்டங்களுக்கு உயர்தர மணல் தேவைப்படுவதால் இந்த நாடுகள் இறக்குமதியை நம்பியுள்ளது.

வளைகுடா நாடுகளின் நிலை

சவுதி அரேபியா மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகளும் மணலை இறக்குமதி செய்கின்றன.

துபாய் மற்றும் அபுதாபியின் கட்டுமான விரிவாக்கத்திற்கு தரமான மணல் தேவைப்படுகிறது. UNEP 2024 அறிக்கையின்படி, விரைவான நகரமயமாக்கல் மணல் தேவையை அதிகரிக்கிறது.

மணல் இறக்குமதி என்பது சவுதி மட்டுமல்ல, உலகளாவிய பிரச்னையாக உள்ளது. மணல் தேவைக்காக M-sand மற்றும் மாற்று பொருள்கள் குறித்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இருப்பினும் தற்போதைய மெகா திட்டங்களின் அவசரத் தேவைகளால் இறக்குமதி தொடர்கிறது.

பாலைவன நாடு மணலை இறக்குமதி செய்வது விசித்திரமாகத் தோன்றினாலும், இது கட்டுமானத் தரம், உலகளாவிய வர்த்தகத்தின் நிலையை வெளிப்படுத்துகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *