
திருநெல்வேலி: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டுப் பன்றிகள் சுட்டுப் பிடிக்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, அப்பர் கோதையார் பகுதிகளை உள்ளடக்கிய களக்காடு வனச்சரகப் பகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை தடுப்பதற்கு, காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.