
ஆபாசம் நிறைந்த வசனங்கள், காட்சிகள், காணொலிகள் இருப்பதாகக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 25 ஓடிடி செயலிகளுக்குத் தடைவிதித்திருக்கிறது.
சில ஓடிடி செயலிகள் ஆபாசமான காணொலிகள், வெப்சீரிஸ், படங்களை வெளியிட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமிருந்தன. மேலும், குடும்ப உறவு முறைகளை சீர்கெடுப்பதாகவும், ஆபாசம் போன்றவை சமூகத்தை, இளைஞர்களைக் கெடுப்பதாக இருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சில ஓடிடி செயலிகள் மீது வைக்கப்பட்டன.
I have raised this in the standing committee that apps such as this, namely, Ullu App and Alt Balaji have managed to escape the ban by I&B ministry on apps for obscene content. I am still awaiting their reply. pic.twitter.com/evZS1LFvLZ
— Priyanka Chaturvedi (@priyankac19) May 1, 2025
குறிப்பாக, சிவசேனா கட்சியின் எம்.பி பிரியங்கா சதுர்வேதி, காணொலி ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “இது போன்ற ஆபாசங்கள் நிறைந்த காணொலிகளை, படங்களை வெளியிடும் ஓடிடி செயலிகள் மீது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘Ullu App’, ‘Alt Balaji’ போன்ற ஆபாசங்களை பரப்பும் ஓடிடிகள் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிவிடுகின்றன. இதுபோன்ற ஆபாசங்களைப் பரப்பும் செயலிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தது பேசுபொருளாகியிருந்தது.
இப்படியாகப் பலரும் ஆபாச படங்களை ஒளிப்பரப்பும் ஓடிடி செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி, கேள்வி எழுப்பி வந்தனர். சமூக வலைதளங்களில் வெடித்த இந்த விவகாரம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் காதுகள் வரைச் சென்றிருக்கிறது.
இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 25 ஓடிடி செயலிகளுக்குத் தடைவிதித்திருக்கிறது.
தடைசெய்யப்பட்ட ஓடிடி செயலிகள்: ALTBalaji (ALTT), Ullu, Big Shots App, Desiflix, Boomex, NeonX VIP, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, ShowHit, Jalva App, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Fugi, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App, MoodX, Triflicks, Mojflix.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs