
சென்னை: “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்” என தமிழகம் முழுவதும் வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரச்சாரம் செய்து, பொதுமக்களின் கருத்தை பெற்று கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் அனுப்பி வருகின்றனர்.
தமிழகத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி களப் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது வரை 80 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தவெக இணைந்துள்ள நிலையில், விரைவில் ஒரு கோடி உறுப்பினர் எண்ணிக்கையை எட்ட இருக்கிறது. மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.