
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவையின் துணைத்தலைவர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் சாசன பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலானது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952 மற்றும் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் விதிகள், 1974 ஆகியவற்றின் கீழ் நடத்தப்படுகின்றது.