
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் நாளை (ஜூலை 26) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடந்து, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 26) முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.