• July 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆடி அமா​வாசையை முன்​னிட்​டு, சென்​னை​யில் கடற்​கரை, கோயில் தெப்​பக்​குளம் உட்பட பல்​வேறு நீர்​நிலைகளில் ஏராள​மானோர் முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்​தனர். முன்​னோர் வழி​பாட்​டுக்கு உகந்தநாளாக அமா​வாசை கருதப்​படு​கிறது. அதிலும், ஆடி, புரட்​டாசி (மகாள​யம்), தை மாதங்​களில் வரும் அமா​வாசை நாள், கூடு​தல் சிறப்பு வாய்ந்​த​தாக கூறப்​படு​கிறது.

ஆடி அமா​வாசை நாளில் புனித நீராடி, முன்​னோருக்கு எள் மற்​றும் அரிசி மாவால் செய்​யப்​பட்ட பிண்​டங்​களை வைத்து தர்ப்​பணம் செய்​வது, அவர்​களின் ஆசிகளைப் பெற்று குடும்​பத்​தில் சுபிட்​சம் உண்​டாகும் என்​பது ஐதீகம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *