
சென்னை: பாஜக நிர்வாகி டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைதான அபுபக்கர் சித்திக்கை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாஜக மாநில மருத்துவ அணி செயலராக இருந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி, வேலூர் கொசப்பேட்டையில் 2012-ல் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரித்து, தீவிரவாதிகள் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும், முக்கிய நபரான அபுபக்கர் சித்திக்கை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.