
சென்னை: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2 ஆண்டுகள் கழித்து, பலமுறை, நாம் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய பின்பு, கடந்த 2023, செப்டம்பரில் அதை செயல்படுத்தியது.
அதிலும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றியது திமுக. இதனால், தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் வரவிருப்பதால் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளது திமுக அரசு.