
இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றிருக்கிறார்.
மாநிலங்களவையில் பதவியேற்ற கமல், “மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுன் உறுதிகூறுகிறேன். வணக்கம்” என உறுதி எடுத்து, பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.
கட்சித் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் எம்.பி. கமலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதவிர தி.மு.க சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் அ.தி.மு.க சார்பில் இன்ப துரை, தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs