• July 25, 2025
  • NewsEditor
  • 0

ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களுடன் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்பு குறையாத மனதுடன் அதை வாசித்தார்கள்.

தமிழ் மக்களின் கருணை, தமிழர் அறம், தமிழ் மண்ணின் வீரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளம் பாரி மன்னன்.

தமிழ் மக்கள் பாரி தொடங்கி அந்த வரலாற்றின் அத்தனை பாத்திரங்களையும் தங்கள் நெஞ்சில் சுமந்தார்கள். அதனால்தான் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக வடிவம் பெற்று இன்று ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாறு படைத்திருக்கிறது.

வீரயுக நாயகன் வேள்பாரி

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ ஒரு லட்சம் பிரதிகள் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்ததை விகடன் பிரசுரம் வெற்றி விழாவாகக் கொண்டாடியது.

நடிகர் ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு அரசு நிதித்துறை செயலாளர் த. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோருடன் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைப் படைத்த சு.வெங்கடேசன் பங்கேற்ற இந்த விழா ஜூலை 11 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர், எந்திரன் திரைப்படத்திற்குப் பிறகு, தனது கனவு திரைப்படமாக வேள்பாரி இருப்பதாகக் கூறினார்.

வாசகர்களாகிய உங்களுக்கு வேள்பாரி எவ்வளவு பிடிக்கும்?, ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலில் உங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் எது?, உங்கள் மனதை அதிகம் பாதித்த காட்சி எது?, காதல், வீரம், ஓவியம், மொழி வளம், தமிழர் அறம், மாண்பு இப்படி பல அற்புதங்கள் அடங்கிய இந்தப் படைப்பில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?

உங்கள் கட்டுரை 600-800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். உங்களது கட்டுரையை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நினைவில் கொள்க:

ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கிறது.

விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.

கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *