
சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவல்துறையினரால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடிய பொருட்களுடன் விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியபோது, கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெலியாகி இருக்கிறது.
மே 29 அன்று, ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையின் மேற்பார்வையாளர், பொருட்களை சரிபார்க்கும்போது ஒரு பை காணாமல் போனதை கவனித்திருக்கிறார்.
உடனடியாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 38 வயது இந்தியர் ஒருவர் பையை எடுத்துவிட்டு பணம் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
இதுபோன்று அவர் 13 கடைகளில் இருந்தும் பொருட்களை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறு கைது செய்யப்பட்டார்?
அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறியிருந்தாலும், காவல்துறையினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர். ஜூன் 1 அன்று அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியபோது, காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றவாளிகள் விமானத்தில் ஏறி தப்பித்து விடலாம் என்று நினைக்கக் கூடாது. கடை திருட்டு வழக்குகளை தடுக்கவும், புலனாய்வு செய்யவும் காவல்துறை தொடர்ந்து பணியாற்றும்,” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.