
சில மாதங்களாக, நட்பிற்கு இலக்கணமாக இருந்து வந்தார்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்.
‘ஒன் பிக் அண்டு பியூட்டிஃபுல் பில்’லை ட்ரம்ப் அறிமுகம் செய்ய, அந்த நட்பில் விரிசல் விழுந்தது. அந்தப் பில்லில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சலுகையை ‘கட்’ செய்தது மஸ்கிற்கு பிடிக்கவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
எலான் மஸ்கும் தன் பங்கிற்கு, பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் ஆவணத்தில் ட்ரம்ப் பெயர் உள்ளது என்ற குண்டைத் தூக்கி போட்டார்.
இடையில் எலான் மஸ்க் மன்னிப்பு கேட்கும் தொனியில் சென்றாலும், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
இந்த நிலையில், நேற்று ட்ரம்ப் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், “எலான் மஸ்க் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து பெறும் பெரிய அளவிலான மானியங்களை நிறுத்தி, எலான் மஸ்க் நிறுவனங்களை நான் அழித்துவிடுவேன் என்று அனைவரும் கூறுகிறார்கள்.
ஆனால், அது உண்மை அல்ல.
எனக்கு எலான் மற்றும் அவரது அனைத்து பிசினஸ்களும் அமெரிக்காவிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
முன்பை விட, அது இப்போது இன்னும் நன்கு செயல்புரிய வேண்டும்.
அது நன்கு செயல்படும்போது, அமெரிக்காவும் நன்கு வளரும். இது நம் அனைவருக்குமே நன்மை.
நாம் தினம் தினம் சாதனைகளைப் படைத்து வருகிறேன். அது அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்கின் பதில்
இந்தப் பதிவிற்கு எலான் மஸ்க் ‘Phew’ என்று நிம்மதியான தொனியில் ஒற்றை வார்த்தையில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் வரியைக் காட்டி எலான் மஸ்கை பயமுறுத்தி வந்த நிலையில், திடீரென்று ட்ரம்ப் இப்படி அந்தர்பல்டி அடித்துள்ளார்.
இந்தப் பதிவுகளின் மூலம், ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பு மீண்டும் மலருகிறதா என்கிற கேள்வி எழுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.