• July 25, 2025
  • NewsEditor
  • 0

பஸ்​தர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் பாது​காப்பு படை​யினர் மேற்​கொண்ட தீவிர நக்​சல் வேட்​டையை தொடர்ந்​து, 5 மாவட்​டங்​களில் நேற்று 66 நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். இவர்​களில் 49 பேர் பற்றி தகவல் தெரி​விப்​போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் நக்​சலைட்​களை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர நடவடிக்கை எடுத்​து வருகிறது. நக்​சல் வேட்​டைக்கு என மத்​திய ஆயுதப்​படை மற்​றும் மாநில போலீ​ஸில் சிறப்பு படைகள் உரு​வாக்​கப்​பட்​டன. இவர்களு​டன் துணை ராணுவப்​படை​யினரும், விமானப்​படை ஹெலி​காப்​டர் உதவி​யுடன் தீவிர தேடுல் வேட்​டை​யில் ஈடு​பட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *