
‘கூலி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
சமீபத்தில் இணையத்தில் ‘கூலி’ படத்தில் சிறுகதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக படக்குழுவினர் அமைதி காத்து வந்தார்கள். இந்த வதந்திக்கு பேட்டியொன்றில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.