• July 25, 2025
  • NewsEditor
  • 0

பிரதமர் மோடி மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக தொடர் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இப்போதுக்கூட, ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம், பீகார் சிறப்பு வாக்காளர் பெயர் திருத்த விவகாரம், ஏர் இந்தியா விமான விபத்து என விவாதிக்கவும், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்கவும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் இருந்தும், வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பிரதமர் மோடி

இந்த நிலையில், நாடாளுமன்ற எம்.பி டெரெக் ஓபிரையன் பிரதமரின் வெளிநாட்டுப் பயண செலவினங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு வெளியுறவு அமைச்சகம் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்திருக்கிறது. அதில், 2025-ம் ஆண்டில் இதுவரை பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை, சவுதி அரேபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான பயணங்களுக்கான செலவினங்களின் விவரங்களை வெளியுறவு அமைச்சகம் வழங்கியது.

2025-ம் ஆண்டிற்கான வெளியிடப்பட்ட விவரங்களில், பிரான்ஸ் பயணத்திற்காக ரூ.25.5 கோடி, அமெரிக்கா பயணத்துக்கு ரூ.16.5 கோடி, தாய்லாந்து ரூ.4.9 கோடி, இலங்கைக்கு ரூ.4.4 கோடி, சவுதி அரேபியாவிற்கு ரூ15.5 கோடி செலவிடப்பட்டது. அதாவது, 2025-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் ஐந்து நாடுகளுக்கான பயணத்திற்காக இந்தியா ரூ.67 கோடிக்கும் அதிகமாக செலவிட்டிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆண்டு வாரியான விவரம்:

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு

2024-ம் ஆண்டில் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவும்,

2023-ல் ரூ.93 கோடி,

2022-ல் ரூ.55 கோடி,

2021-ல் ரூ.36 கோடியும் செலவாகியுள்ளது.

இதுவரை செலவிடப்பட்டத்தில் அதிகப் பயண செலவு அமெரிக்கா பயணமாகும். 2021 முதல் நான்கு முறை அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக ரூ.74.44 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து மூன்று முறை பிரான்ஸ் பயணத்துக்கு ரூ.41.29 கோடி, மூன்று முறை ஜப்பான் பயணத்துக்கு ரூ.32.96 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டில் பிரதமரின் பொது நிகழ்வுகளை விளம்பரப்படுத்துவதற்கும் ஒளிபரப்புவதற்கும் ரூ.1.03 கோடிக்கு மேல் செலவிடப்பட்டிருக்கிறது.

‘விளம்பரம்’ என்ற செலவு இந்தியா, எகிப்தை தவிர வேறு எந்த நாடும் செய்வதில்லை. எகிப்தின் அதிகபட்சம் விளம்பர செலவு ரூ11.90 லட்சம் மட்டுமே. ஆனால் இந்தியா ரூ.1.03 கோடி செலவிட்டிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதே நேரத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மீதமுள்ள ஒன்பது நாடுகளுக்கான பயணங்களுக்கான பில்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறது.

2021 – 2024 க்கு இடையில் வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டும் பிரதமர் மோடி ரூ.295 கோடிக்கும் அதிகமாக செலவிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி பதவியேற்ற 2014 முதல் நவம்பர் 2019 வரை மட்டுமே வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.3,59,04,52,763. அதாவது 43 மில்லியன் டாலர். இந்த விவகாரம் அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகே பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *