
அமெரிக்கா அதிபரும் Make America Great Again (MAGA) அமைப்பின் தலைவருமான டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க்கில் நடந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ட்ரம்ப், “ தீவிர உலகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவந்து, தேசபக்தியை ஊக்குவிக்க வேண்டும். அமெரிக்கா AI பந்தயத்தில் வெற்றிபெற உதவும் வகையில், சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பால் ஒரு புதிய தேசிய விசுவாசத்தை வளர்க்க வேண்டும். பலப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் மூலம் பல நன்மைகளை அனுபவிக்கின்றன.
ஆனால், தொழிற்சாலையை சீனாவிலும், ஊழியர்களாக இந்தியர்களையும் அமைக்கின்றன. இந்தியா மற்றும் சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதைவிட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குங்கள்.
ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை குறைத்துக்கொள்ள வேண்டும். அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் தேசிய உணர்வுடன் வெளிநாடுகளில் பணியாளர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். AI தொழில்நுட்பத்தில் அமெரிக்கா வெல்லப்போகிறது என்பதை அறிவிக்கும் அமெரிக்க அதிபராக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.” என்றார்.