
புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நடவடிக்கையை திரும்ப பெறக் கோரியும், இது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க கோரியும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில் படிக்கட்டில் நின்று கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.