
சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு “பெண்ணின்” பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.
அந்தப் “பெண்” ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை. ஜியாங் என்ற அந்த முதியவர், AI-யின் இனிமையான பேச்சை உண்மையென நம்பி தினமும் தனது தொலைபேசியில் அதன் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.
ஆனால், அந்தப் பேச்சும் உதட்டு அசைவுகளும் ஒத்திசைவாக இல்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. இந்த ஏஐ பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார் ஜியாங்.
ஜியாங் மட்டுமல்லாமல் சீனாவில் பல முதியவர்கள் AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களில் மூழ்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த AI-கள், அழகிய தொகுப்பாளர்கள், மாணவிகள் என பல்வேறு வடிவங்களில் உள்ளன.
இப்படி AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விளம்பரங்கள் அவர்களைப் பொருள்கள் வாங்கத் தூண்டுகின்றன.
பல்வேறு பொருள்கள் ஏஐ மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தப் பொருள்கள் உண்மையில் இல்லை என்பதையும், பேசுவது AI-ஆல் உருவாக்கப்பட்டவை என்பதையும் முதியவர்கள் உணர்வதில்லை.
இதனால் அவர்கள் பணத்தை இழப்பதாக கூறப்படுகிறது. ஏஐயின் தாக்கம் உணர்ச்சி ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.