• July 25, 2025
  • NewsEditor
  • 0

சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த 6 டிரோன்களை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டம் மோதே கிராமத்துக்கு அருகில் இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் புதன்கிழமை இரவு கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 5 டிரோன்களை சுட்டு வீழ்த்தினர். இதில் 3 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதுபோல் அட்டாரி கிராமத்துக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *