• July 25, 2025
  • NewsEditor
  • 0

இங்கிலாந்து இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றைய (ஜூலை 23) தினம் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. போட்டியின்போது பேட்டிங் விளையாடிய இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

கிறிஸ் வோக்ஸ் போட்ட பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் பந்து இன்சைட்-எட்ஜ் ஆகி அவரது வலது காலை தாக்கியது.

அந்த பந்து மைதானத்தில் இரத்தம் வருமளவு பலத்த காயத்தை ஏற்படுத்தியது.

மைதானத்தில் கொடுக்கப்பட்ட பிஸியோ சிகிச்சை பலனளிக்காததால் பண்ட் வாகனத்தில் மைதானத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்டார்.

pant injury

மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதன்படி, அவருக்கு கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, கட்டாயமாக இன்னும் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும்.

இதனால் இந்த டெஸ்டின் மீதமுள்ள நாள்களிலும், கடைசி போட்டியில் பண்ட் விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டது.

Rishab Pant -க்கு மாற்றாக துருவ் ஜுரல்

கடுமையான வலியால் அவதிப்பட்டுவரும் பண்டுக்கு பதிலாக இந்தப் போட்டியில் துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக களமிறங்குவார்.

ஆனால் விதிமுறைகள்படி அவரால் பேட்டிங் செய்ய முடியாது. இதனால் மீதமுள்ள நான்கு நாட்களில் இந்தியாவின் 10 நபர் கொண்ட அணியையே இங்கிலாந்து எதிர்கொள்ளும் சூழல் உருவானது.

இந்த நிலையில் பண்ட் குறித்து பிசிசிஐ (BCCI) புதிய அப்டேட் வெளியிட்டிருக்கிறது. எக்ஸ் தளத்தில் பிசிசிஐ, “மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் காயமடைந்த பண்ட், போட்டியின் மீதமுள்ள நாள்களில் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார். அவருக்குப் பதில் துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராகப் பொறுப்பேற்பார். அதேசமயம், காயம் இருந்தாலும் இரண்டாம் நாளில் அணியுடன் பண்ட் இணைந்துள்ளார். அணியின் தேவைகளுக்கு ஏற்ப பண்ட் பேட்டிங் செய்வார்.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *