• July 24, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் கடந்த திங்கட்கிழமை காலமானார்.

சிபிஎம்-ன் நிறுவனத் தலைவரான வி.எஸ்., உடல் புதன்கிழமை ஆலப்புழாவில் உள்ள வலியாச்சுடுகாட்டில் உள்ள தியாகிகள் தூணில் முழு அரசு மரியாதையுடன், முழு துப்பாக்கி வணக்கம் உட்பட தகனம் செய்யப்பட்டது.

வி.எஸ்.,

அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்து கனமழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர். தலைநகரிலிருந்து சுடுகாடு வரை ‘கண்ணே கரலே வியாசே’ என்ற முழக்கம் நிறைந்திருந்தது.

அந்த வகையில், பரவூர் என்ற பகுதியில் உள்ள வி.எஸ் அச்சுதானந்தன் வீட்டில் ஆயிரா பி ஹமீது என்ற 1ம் வகுப்பு படிக்கும் மாணவி முழக்கங்களை எழுப்பி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளார்.

பத்தினம்திட்டாவில் உள்ள புரமாட்டம் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் இந்த மழலையின் வீடியோ வைரலாகி வருகிறது. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ:

வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு நாடு முழுவதிலுமிருந்து தலைவர்கள் அஞ்சலி செய்தி வெளியிட்டனர். இறுதிச்சடங்கில் முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கோஷங்களை எழுப்பினர்.

வி.எஸ்.அச்சுதானந்தன் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். தொழிற்சங்க ஈடுபாடுகள் மூலம் அரசியலில் நுழைந்த அவரது வாழ்க்கையில் புன்னப்ரா-வயலார் போராட்டம் (1946) முக்கிய திருப்பமாக அமைந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யில் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், மத்தியக் குழு உறுப்பினராகவும், பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளாவின் முதலமைச்சராக பதவிவகித்தார்.

வி.எஸ்., மக்களோடு மக்களில் ஒருவராக இருக்கும் எளிமையான வாழ்க்கை முறைக்காக போற்றப்பட்டு, கம்யூனிஸ தொண்டர்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *