
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணொலி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே முகாம்களின் பயனாளிகளுடன் கலந்துரைய முதல்வர், அரசு கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் ஓய்வில் இருந்தாலும் அலுவல் பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார்.