
ஆகஸ்ட் 22-ம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளன்று ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
விஜயகாந்த் நடிப்பில் அவரது 100-வது படமாக வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த படமாக மாறியது ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படத்தை 34 வருடங்கள் கழித்து தற்போதைய 4கே தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி விஜயகாந்த் பிறந்த நாளன்று மறுவெளியீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.