
புதுடெல்லி: 95% இந்திய வேளாண் பொருட்களும், 99% இந்திய கடல்சார் உணவுப் பொருட்களும் வரி இன்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) என்ற பெயரிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பியூஷ் கோயல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் இந்திய – இங்கிலாந்து மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.