
பீகாரில் `ஸ்பெஷல் இன்டன்சிவ் ரிவிஷன்’ (SIR) என்ற சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.
இதில், 1987-க்குப் பின்னர் பிறந்தவர்கள் தேர்தல் அலுவலர்களிடம், பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் தேவையானவற்றைச் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தாங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இன்னும் 4 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இந்தப் பணிக்கு அவசர அவசரமாக ஒரு மாத காலம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருப்பதும், ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதும்தான் இங்குப் பிரச்னை.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
பா.ஜ.க தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பீகார் ஆளுங்கட்சி (JDU) எம்.பி கிரிதாரி யாதவ், இந்தப் பணி தங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் ஆணையத்துக்கு நடைமுறை அறிவே இல்லை என்றும் வெளிப்படையாக விமர்சித்தார்.
மறுபக்கம், “மொத்தம் 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும்” என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

மேலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில், “இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் அல்லது வெளிநாட்டினருக்கு வழிவகுக்க வேண்டுமா?
அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் இதைப் பற்றி எல்லோரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இத்தகைய விளக்கத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
It's a serious matter. The Election Commission is not functioning as the Election Commission of India should. Today, they made a statement that's complete nonsense.
The fact of the matter is, the EC isn't doing its job. Now we have concrete, 100% proof of the Election Commission… pic.twitter.com/urIfSGkCoC
— Congress (@INCIndia) July 24, 2025
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இதுவொரு தீவிரமான விஷயம். இந்தியத் தேர்தல் ஆணையம் தாங்கள் செயல்பட வேண்டிய அளவுக்குச் செயல்படவில்லை.
முட்டாள்தனமான அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.
கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மோசடி செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்ததற்கான 100 சதவிகித ஆதாரம் எங்களிடம் இருக்கிறது.
நாங்கள் அதைக் கண்டுபிடித்தோம். இந்த நாடகம் தொகுதி வாரியாக நடந்திருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இதிலிருந்து நீங்கள் தப்பிக்க நினைத்தால் நாங்கள் விடமாட்டோம்” என்று தேர்தல் ஆணையத்தை விமர்சித்தார்.Career: அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி; என்ன தகுதி வேண்டும்? யார் விண்ணப்பிக்கலாம்?