
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள்.
மொத்த காலிப் பணியிடங்கள்: 574,
தொகுப்பூதியம்: மாதம் ரூ.25,000,
வயது வரம்பு: அதிகபட்சமாக 57,
கல்வித் தகுதி: குறைந்தபட்சமாக முதுநிலைப் பட்டம். இத்துடன் பி.எச்.டி, NET, SLET, SET – ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பதாரர் ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மண்டலத்திற்குட்பட்ட 3 மாவட்டங்களை விருப்பப்படி வரிசைப்படுத்த வேண்டும்.
ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டால் முதலாவதாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மதிப்பீடு.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.tngasa.org
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஆகஸ்ட் 4, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!