
வேட்புமனு தாக்கல் – உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களுக்கு பிள்ளையார் சுழி இது தான்.
வேட்புமனு தாக்கலே நம் நாட்டில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.
இதெல்லாம் இல்லாமல், இனி சைலென்டாக சில கிளிக்குகளிலேயே வேட்புமனு தாக்கல் முடிந்துவிட போகிறது.
ஆம்… இனி வேட்புமனு தாக்கலும் ஆன்லைனிற்கு மாற போகிறது.
முதலில் பீகார்; பிறகு…
இந்த ஆண்டின் கடைசியில் நடக்க உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்த நடைமுறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அது வெற்றிகரமாக இருந்தால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
என்ன இணையதளம்?
வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட உள்ள இணையதளம் suvidha.eci.gov.in.
இந்த இணையதளத்தில் வேட்பாளர்கள் தங்களது மொபைல் எண்ணை கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
பின், அதில் கேட்கப்படும் வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்தால், வேட்பாளரை பற்றிய அடிப்படை தகவல்கள் தானாக வந்துவிடும்.
பின்னர், போட்டியிடப் போகும் தொகுதியை தேர்வு செய்து, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த இணையதளத்திலேயே சொத்து, வழக்கு போன்ற அனைத்து விவரங்களை அபிடவிட்டாகவும், தேவையான ஆவணங்களையும் அப்லோட் செய்து பதிந்துகொள்ளலாம்.

இது மட்டுமல்ல…
இந்த இணையதளத்தில் பிரசாரங்களுக்கான அனுமதி, பாதுகாப்பு கோரிக்கைகள், வரவு செலவு கணக்கு போன்றவற்றையும் தாக்கல் செய்யலாம்.
‘பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளது. இரண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றாக வரும்போது, பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை இந்த இணையதளம் தடுக்கும்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.