
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சினிமா தொடர்பான பக்கங்களில் அதிகம் இடம்பெறும் பெயர்… சாய் அபயங்கர். ஒருபக்கம் இவரது பாடல்கள், முன்னணி இயக்குநர்கள் – நடிகர்களின் படங்களுக்கு ஒப்பந்தம் ஆவது குறித்த செய்திகள் என்றால், இன்னொரு பக்கம் இவர் தொடர்பான ட்ரோல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
தமிழ் சினிமாவின் பிரபல பாடகர்களான திப்பு – ஹரிணி தம்பதியரின் மூத்த மகன்தான் சாய் அபயங்கர். சிறுவயது முதலே இசையில் ஆர்வம் மிகுந்த சாய் அபயங்கர், தபேலா, கிடார், டிரம்ஸ் போன்ற இசைக் கருவிகளை கற்றவர். கூடவே குரல் பயிற்சியும் மேற்கொண்ட அவர், 13 வயதிலேயே இசையமைக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.