• July 24, 2025
  • NewsEditor
  • 0

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற AI வீடியோவை டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்தது அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியது. இதன் பின்னணியில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட்டை மேற்கோள் காண்பித்து, “2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக நான் பதவியேற்பதைத் தடுக்க, ஒபாமா மற்றும் அவரது அதிகாரிகள் `2016 தேர்தலில் ரஷ்ய தலையீடு’ இருப்பதாக ஒரு தியரியை உருவாக்கினர்.

அதன் மூலம் தேர்தலை குழப்ப முயன்றனர். மற்ற நாடுகளில் கூட யாரும் கற்பனை செய்யாத விஷயங்களை அவர்கள் செய்தார்கள். இதற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது.

“ஒபாமா கைது… AI வீடியோ” – ட்ரம்ப் குற்றச்சாட்டு என்ன?

எனவே, இதுகுறித்து ஒபாமாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். AI வீடியோவுக்குப் பின்னணியில் இந்த விவகாரம் பேசுபொருளானது.

இந்தக் குற்றச்சாட்டுக்கும் AI வீடியோவுக்கும் பதிலளிக்கும் வகையில் முன்னாள் அதிபர் ஒபாமா, “ட்ரம்பின் வினோதமான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. அவர் மீது இருக்கும் பாலியல் வழக்கை திசை திருப்பும் பலவீனமான முயற்சி.

அதிபர் பதவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த வெள்ளை மாளிகையிலிருந்து தொடர்ந்து வரும் முட்டாள்தனமான, தவறான தகவல்களை எங்கள் அலுவலகம் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இப்போது கூறப்படும் குற்றச்சாட்டு அப்படி கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *