
சென்னை: கல்வியாண்டு முடிவடைவதற்கு முன், பேராசிரியரின் மறு நியமன பதவிக்காலத்தை குறைத்த சென்னை பல்கலைகழகத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறை தலைவராக பணியாற்றிய வெங்கடாசலபதி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணி ஓய்வு பெற்றார். பல்கலைக்கழக சட்டப்படி, கல்வியாண்டு முடிவடையும் ஜூன் 30 ஆம் தேதி வரை பணியாற்ற அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.