
இன்றுடன் மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் ஸ்டாலினால் 2019-ல் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டவர் வைகோ. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு 24 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பியாகப் பதவி வகித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தனது கடைசி உரையாற்றிய வைகோ, “தமிழ் ஈழ படுகொலைக்கு நீதி கேட்டும், இனப்படுகொலை செய்த இலங்கை சிங்கள அரசின் கொடுஞ் செயலை அம்பலப்படுத்தியும் 13 வீர உரைகள் ஆற்றி, இந்த மாநிலங்களவையில் முழங்கியிருக்கிறேன். அதற்காக பல இன்னல்களையும் எதிர்கொண்டிருக்கிறேன்” என்று குறையாத வேகத்துடன் பேசியிருக்கிறார் வைகோ.
இதையடுத்து மாநிலங்களவையில் பேசிய மகாராஷ்டிரா ‘Republican Party of India’ கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் வைகோ எம்.பி., ஆகலாம்.”என்று மாநிலங்களவையிலேயே அழைப்பு விடுத்துப் பேசியிருக்கிறார்.

அம்பேத்கரை கொள்கைத் தலைவராக ஏற்று இயங்கி வரும் ‘Republican Party of India’ கட்சி, 2011ஆம் ஆண்டு பாஜக கூட்டணியான ‘தேசிய ஜனநாயக் கூட்டணி (NDA) உடன் இணைந்தது. கோவிட் பெருந்தொற்று சமயத்தில் ‘Go Corona… Go Corona’ என ராம்தாஸ் அத்வாலே கோஷமிட்ட காணொலி வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs