
இன்றுடன் மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை கலைஞர் கருணாநிதியால் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் ஸ்டாலினால் 2019-ல் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டவர் வைகோ.
மாநிலங்களவையில் தனது கடைசி நாளில் உரையாற்றி வரும் வைகோ, “1978ஆம் ஆண்டு என்னை முதன்முதலாக மாநிலங்களவைக்கு அனுப்பியவர் கலைஞர். அதைத்தொடர்ந்து 1984, 1990 எனத் தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பினார். அவருக்குப் பிறகு திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2019-ம் ஆண்டு என்னை இந்த மாநிலங்களவைக்கு அனுப்பினார். திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக இருந்த முரசொலி மாறனால் வார்த்தெடுக்கப்பட்டவன் நான்.
அண்ணா சொன்னது
இந்த மாநிலங்களவையில் பல தலைவர்களை எதிர்கொண்டிருக்கிறேன். பல தலைவர்களுடன் பயணித்திருக்கிறேன். 1963ஆம் ஆண்டு, ஏப்ரலில் அண்ணா தனது பாராளுமன்ற உரையில் ‘I belong to dravidian stock‘ என்று குறிப்பிட்டுப் பேசினார். அண்ணாவின் அந்த உரை தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களில் இருந்து தனித்துக் காட்டியது. அதைப் பின்தொடர்ந்து இங்கு இருக்கும் என் சக மாநிலங்களவை உறுப்பினர்களும், இனி வருபவர்களும் தமிழ்நாட்டை தனித்துவத்துடன் உயர்த்த பாடுபட வேண்டும்.

தமிழ் ஈழ படுகொலை
தமிழ் ஈழ படுகொலைக்கு நீதி கேட்டும், இனப்படுகொலை செய்த இலங்கை சிங்கள அரசின் கொடுஞ் செயலை அம்பலப்படுத்தியும் 13 வீர உரைகள் ஆற்றி, இந்த மாநிலங்களவையில் முழங்கியிருக்கிறேன். அதற்காக என் விசா (Visa) முடக்கப்பட்டது, சிறை சென்றிருக்கிறேன், இன்னும் பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் வலிகள், சோகங்கள் நிறைந்ததாக இருந்தாலும் என்றும் என்வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள்.
நாம் வெற்றி, தோல்வி, துரோகம் எனப் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் துவண்டுவிடக்கூடாது. என்னவானாலும் கடைசிவரை தமிழ் மக்களுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் என் வீர வாளைச் சுழற்றிக் கொண்டேதான் இருப்பேன்.
நன்றி. வணக்கம்” என்று தனது கடைசி மாநிலங்களவை உரையில் குறையாத வேகத்துடன் பேசியிருக்கிறார் வைகோ.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs