
சென்னை: கர்நாடகத்தில் செப்.22 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி ஞானம் எப்போது தான் பிறக்கும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, கடந்த பத்தாண்டுகளில் இரண்டாவது முறையாக வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.