
சென்னை: அன்புமணியின் ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்துக்கு’ தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ‛தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் நாளை (ஜூலை 25) முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினரை சந்திக்க உள்ளார். இந்நிலையில், ‘தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவது மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.