
சென்னை: தரமணி மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அக். 31-க்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சர்தார் பட்டேல்சாலையையும் – ராஜீவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், தரமணி மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் (L) வடிவத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.