
‘மருத்துவமனையில் முதல்வர்!’
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் துரை முருகன் கூறியிருக்கிறார்.
‘அப்டேட்!’
முதல்வர் ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது தலைசுற்றல் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனை அறிக்கையும் அதை உறுதி செய்தது. ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் சில பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் முதல்வரை உதயநிதி ஸ்டாலின், அழகிரி, துரை முருகன் ஆகியோர் தொடர்ந்து நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
‘முதல்வர் நலமாக இருக்கிறார். இன்னும் 2-3 நாள்களில் வீடு திரும்பிவிடுவார்.’ என்றே அவர்கள் கூறி வந்தனர். முதல்வரும் நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைப் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

‘ஆஞ்சியோ…’
இந்நிலையில்தான் துரை முருகன் முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ‘முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது. இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார்.’ என துரைமுருகன் கூறியிருக்கிறார்.