• July 24, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தில் மதுரை மாவட்ட சாப்டூர் வனச்சரக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இங்கு சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் என இரண்டு சிவலிங்கங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன.

மலையேறும் பக்தர்கள்

இது மட்டுமல்லாமல் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இங்கு தவம் செய்வதாகவும் இன்னும் சில சித்தர்கள் இங்கு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரகணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் வாகனங்கள் தாணிப்பாறை விளக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து சுமார் 6 கி.மீ நடந்து வந்து தாணிப்பாறை அடிவாரத்தை அடைந்து, பின் மலையேறி வருகின்றனர். மலையேறும் பக்தர்கள் பிற்பகல் 12மணி வரை தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வனப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை என்றும் வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறுகலான பகுதியில் மலையேறும் பக்தர்கள்

மேலும் பக்தர்கள் யாரும் இரவில் மலைக்கோயிலில் தங்க அனுமதி கிடையாது என்றும் அறிவித்தப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை பாதுகாப்புப் பணியில் விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், நக்சல் தடுப்பு போலீசார் என 2500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அடிக்கடி காற்றாற்று வெள்ளம் ஏற்படும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 60க்கும் மேற்பட்டோர் ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் வருகையே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *