
மும்பை: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ‘டிராவல் பிளஸ் லெஷர் (Travel + Leisure)' என்ற பயண இதழ் வெளியாகிறது. இந்த இதழ் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகளாவிய சர்வே அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.80 லட்சம் வாசகர்கள் பங்கேற்று 6.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இதன் தரவரிசையில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (சிஎஸ்எம்ஐஏ) 84.23 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் ஒன்றாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.