
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’, மற்றும் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இன்னும் பெயரிடாத படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. அவர் தனது 50-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து ‘கருப்பு’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகி வைரலானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இதில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார்.
இதற்கிடையே சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் ஏராளமான ரசிகர்கள் நேற்று கூடினர். வீட்டின் மாடியில் இருந்து அவர்களைப் பார்வையிட்ட சூர்யா, கையசைத்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். பின்பு ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்தார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.