
சென்னை: சென்னையில் இன்று 3, 16, 96, 129, 160, 171 ஆகிய 6 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. திருவொற்றியூர் மண்டலம், 3-வது வார்டு, எண்ணூர், மார்க்கெட் தெரு, அன்னை சிவகாமி நகர் 5-வது தெருவில் உள்ள சமூகநலக் கூடத்திலும், மணலி மண்டலம், 16-வது வார்டு, சடையன்குப்பம், அந்தோணியார் ஆலய சமூகநலக் கூடத்திலும், அண்ணாநகர் மண்டலம், 96-வது வார்டு, அயனாவரம், பரசுராமேஸ்வரன் கோவில் தெருவில் உள்ள வெற்றி மஹாலிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம் இன்று நடைபெறும்.
மேலும், கோடம்பாக்கம் மண்டலம், 129-வது வார்டு, சாலிகிராமம், கே.கே.சாலையில் உள்ள சுடர்மா திருமண மண்டபத்திலும், ஆலந்தூர் மண்டலம், 160-வது வார்டு, சன்னியாசி சுபேதார் தெருவில் உள்ள எஸ்.வி.எஸ்.ஜெயின் சங்கத்திலும், அடையாறு மண்டலம், 171-வது வார்டு, ராஜா அண்ணாமலைபுரம், காமராஜ் சாலை, என்.எஸ்.கார்டன் பகுதியில் புதிய கட்டிடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.