
புதுடெல்லி: அல்காய்தா தீவிர வாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) நேற்று கைது செய்துள்ளது.
இதுகுறித்து ஏடிஎஸ் டிஐஜி சுனில் ஜோஷி கூறியதாவது: நீண்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அல் காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேரை குஜராத் தீவிரவாத தடுப்புப் படை அதிரடியாக கைது செய்துள்ளது.