
பெங்களூரு: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி உட்பட 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.50 கோடி மதிப்பிலான ப‌ணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கின.
கர்நாடக மாநிலத்தில் அரசு பணியில் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று பெங்களூரு, மங்களூரு, மைசூரு, துமக்கூரு, குடகு, கொப்பல், பெலகாவி உள்ளிட்ட இடங்களில் உள்ள 8 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 45 இடங்களில் சோதனை நடத்தினர்.