
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில், நாற்காலியில் ஓட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராமதாஸ் தெரிவித் திருந்தார். கட்சித் தலைவர்கள் மற்றும் பாமக நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டு கேட்புக் கருவி கடந்த 9-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கிளியனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் சைபர் க்ரைம் போலீஸில் கடந்த 15-ம் தேதி பாமக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கிளியனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் ஒட்டுகேட்புக் கருவியை தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் நேற்று ஒப்படைத்தார்.