
விஜய் டிவியில் 10 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் திரையுலகின் பாடகர்களாக வலம் வருகின்றனர். இன்னும் பலர் சுயாதீன இசைக் கலைஞர்களாகவும் உள்ளனர்.
பிரபல முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 11வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக டெல்டா தமிழ், கொங்கு தமிழ், சென்னை தமிழ் என இந்த முறை பங்கேற்பாளர்கள் மண்டல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.