• July 24, 2025
  • NewsEditor
  • 0

வெள்ளை நிற உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என்கிற எண்ணத்தில் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கத் தொடங்கிவிட்டனர் பலர். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா வெள்ளை நிற உணவுகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதில்லை.

வெள்ளைச் சர்க்கரை, தீட்டிய அரிசி போன்ற உணவுப்பொருள்கள் தீங்கு விளைவிக்கும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் சில அத்தியாவசியமான சத்துகள் இயற்கையாகக் கிடைக்கும் வெள்ளை நிற உணவுகளில்தான் நிறைவாக உள்ளன. அப்படிச் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்..

வெள்ளை வெங்காயம்

white foods

வெள்ளை வெங்காயத்தில் உள்ள சல்பர் வயது முதிர்வைத் தள்ளிப்போடும். மேலும் இது சளி, இருமல் வராமல் தடுக்கக் கூடியது. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அல்லிசின் (Allicin) என்ற வேதிப்பொருள் கொலஸ்ட்ராலையும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.

முள்ளங்கி

white foods
white foods

முள்ளங்கி மிகவும் குறைந்த கலோரி கொண்ட வேர் காய்கறிகளில் ஒன்றாகும். இதில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் ஆன்டிஆக்ஸிடண்ட், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. இது புராஸ்ட்டேட், மார்பகம், பெருங்குடல் மற்றும் கருப்பை ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோய்களிலிருந்து காக்கும்.

முட்டை

white foods
white foods

முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்ற சத்துகள் உள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்தும் வெள்ளைக்கருவில் புரதச் சத்தும் அதிகமாக உள்ளது. எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

தேங்காய்

white foods
white foods

துவையலில் தொடங்கி சட்னி, அவியல், குழம்பு, சூப் எனப் பெரும்பாலான சமையல்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. தேங்காய் அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். மூளை வளர்ச்சிக்கும் சத்துகளை உட்கிரகிக்கவும் உதவும். தோல் மற்றும் கண்களின் ஆரோக்கியம் காக்கப்படும். தைராய்டு சுரப்பைச் சீராக்கும், அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி நோய் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. நன்கு செரிமானமாகும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.

வாழைப்பழம்

white foods
white foods

வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் மெக்னீசியம் தாதுச் சத்துகள் உள்ளன. ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதோடு மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளையும் குணப்படுத்தும்.

பால் பொருள்கள்

white foods
white foods

ஃபோலிக் அமிலம் தயாமின், பொட்டாசியம் நிறைந்தது. அமினோஅமிலங்கள், கால்சியம், லாக்டோஸ், புரதம் ஆகியவை உள்ளன. இதிலுள்ள லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துகளை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப்புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது. எலும்புகள், பற்களை வலுவாக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையைப் போக்குகிறது. வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அடைவதைத் தடுக்கிறது.

வெள்ளைப்பூண்டு

white foods
white foods

வெள்ளைப்பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும். மேலும் ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவும். இதயநோய்ப் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *